நடிகர் கமலஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனிமை சிகிச்சையில் உள்ளார்.

இதனால் அவர் கமிட்டான அத்தனை நிகழ்ச்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதில் முக்கியமாக அவர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்த இரண்டு வாரங்களுக்கு யார் தொகுத்து வழங்குவது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

விஜய் சேதுபதி மற்றும் சிம்பு ஆகிய இருவரில் ஒருவர் தற்காலிகமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தனியறையில் இருந்தபடி காணொளி வாயிலாக கமலஹாசனே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்குவார் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.