பெங்களூரு: கர்நாக மாநில பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், லஞ்சப் பணத்தை பிளாஸ்டிக் பைப் லைனில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.  ‘பலே’ பொதுப்பணித்துறை அதிகாரி யின் வீட்டில் உள்ள பைப் லைனில்  இருந்து பணம் பறிமுதல் செய்யப்படும்  வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் கலபுராகியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் சாந்த கவுடா. இவர்மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அரசு வேலைக்கு கையூட்டு பெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டின் சுவரில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பைப்புகளுடன் மேலும் சில பைப்புகள் அமைக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த பைப் லைனை சோதித்த அதிகாரிகள் அது, எதனுடனும் தொடர்பு இல்லாத பைப் என்பதை கண்டுபிடித்ததுடன், அந்த பைப் வெறுமையாக இல்லாமல், உள்ளே ஏதோ பொருட்கள் அடைக்கப்பட்டது போல இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, ஆக்ஷா பிளேடைக்கொண்டு அந்த பைப் லைனை அறுத்தபோது, அதனுள் கட்டுக்கட்டாக அடைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டு கட்டுக்கள் கீழே விழுந்ததது. இதையடுத்து அந்த பைப் முழுவதையும் கட் செய்து,அதனுள் இருந்த லட்சக்கணக்கான லஞ்சப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.  பைப்லைனில் பணத்தை பதக்கி வைத்த பலே அதிகாரியின் செய்ல வியப்பை ஏற்படுத்தி உள்ளது.