ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
‘அண்ணாத்த’ ஏற்படுத்திய நட்ஷ்டத்தை ஈடுகட்ட மற்றொரு படத்தை ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தை பாண்டிராஜ் இயக்கினார், ரசிகர்களிடையே வரவேற்ப்பைப் பெற்று நல்ல வசூலைப் பெற்றது இந்தப்படம்.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளிவர இருக்கும் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் படத்தையும் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்.
இயக்குனர் பாண்டிராஜின் அப்ரோச் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை வெகுவாகக் கவர்ந்ததால் அடுத்ததாக ரஜினியை வைத்து எடுக்கயிருக்கும் படத்திற்கும் பாண்டிராஜையே இயக்குனராக ஒப்பந்தம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள ரஜினிகாந்த் முழுநலத்துடன் வந்ததும் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.