காரைக்குடி: சிவகங்கை பகுதியில் செயல்பட்டு வரும் பியூட்டி பார்லர் ஒன்றுக்கு ஒப்பனைக்காக சென்ற பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, அந்நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியைச் சேர்ந்த, பிளஸ்2 மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் தனது தோழியுடன் சென்று ஒப்பதனை செய்து வந்துள்ளார். இதனால், அந்த மாணவிக்கும், அழகு நிலைய பெண் பொறுப்பாளருக்கும் இடைய பழக்கம் ஏற்பட்டது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி எண்ணிய அழகு நிலைய பெண், அந்த மாணவியிடம் பணம் மற்றும் பாலியல் ஆசை வார்த்தை கூறி மயக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு தொடர்புடைய நபர்களைக்கொண்டும், பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அழகுநிலைய பெண்ணின் அத்துமீறல் குறித்து அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் கூறினார். இதையடுத்து, அந்த மாணவியின் தந்தை காரைக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், தேவகோட்டையைச் சேர்ந்த மணிமாறன் மகன் விக்னேஷ் (28), காரைக்குடியைச் சேர்ந்த பொன்னுவேல் மனைவி லட்சுமி (45) உட்பட 4 பேர் மீது காரைக்குடி மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, முதற்கட்டமாக லட்சுமி, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகள் இருவரை தேடி வந்த நிலையில், தலைமறைவான மன்ஸிஸ் மற்றும் டார்ஜிலிங் பெண் ஆகியோர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
[youtube-feed feed=1]