ராமநாதபுரம்: பொதுமக்களின் வசதிக்காக 2500 புதிய பஸ்கள் வாங்கப்போறோம், இதில் 500 பேருந்துகள் மின்சார பேருந்துகள் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில்,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இதையடுத்து செய்தியளார்களை சந்தித்த அமைச்சர், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு நடைபெற்றதாக தெரிவித்தார், எளிதாக மழைநீர் தங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன என்றார்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் கன மழை, வெள்ளம் போன்ற பேரிடரை எதிர்கொள்ள ஏதுவாக அனைத்து பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறியவர்,  விழிப்புடன் பணியாற்ற மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறியவர், வரும் நிதியாண்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கும் என்றார்.

தமிழக போக்குவரத்து துறைக்கு புதிதாக 2,500 பஸ்கள் வாங்கப்பட உள்ளன. அவைகளில் 500 பஸ்கள் மின்சாரத்தில் இயக்கப்படும்  பஸ்களாகும். மேலும் பழுதான பஸ்களை சீரமைக்க நிதி உதவி கேட்டுள்ளோம். இன்னும் 2,3 மாதங்களுக்குள் அந்த பஸ்களை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.

[youtube-feed feed=1]