திருவண்ணாமலை: அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, அக்னி மலையான திருவண்ணாமலையின் 2,668 அடி உயர உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தைக் கண்டு பக்தர்கள் மெய்சிலித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக மகாதீபத்தை தரிசிக்க தமிழகஅரசு தடை விதித்த நிலையில், பக்தர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியதால், அதன் அறிவுறுத்தலின்பேரில் திருவண்ணாமலையில் இன்று மகாதீபத்தைக் காணவும், கிரிவலம் செல்லவும் அனுமதி கிடைத்தது.
இதையத்து இன்று காலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுக்கத் தொடங்கினார். அண்ணாமலையாரின் அருள் பெற திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கண்குளிர தரிசிக்கும் வகையில், அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
அ
தையடுத்து அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் பரணி தீபமானது ஓடல், எக்காளம் இசை முழங்க அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து சரியாக மாலை 6மணி அளவில் பக்தர்கள் கோஷம் விண்ணை பிளக்க, வைகுந்த வாயில் வழியாக பரணி தீபம் காட்சியளித்தது. இதைக் கண்டதும் 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்த பக்தர்கள் கார்த்திகை மகா தீபம் ஏற்றினர். பக்தர்கள் மெய்யுருக இறைவனை தரிசித்தனர்.
சுமார் 20 மாதங்களுக்கு அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தது… பரவசமாக காணப்பட்டது.