** ஸ்டாலின் தலைமையிலான தி. மு. க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, இந்த ஆறுமாத குறுகிய காலத்தில் பல மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன!
அவற்றின் செயல்பாடுகளை மக்கள் பாராட்டி வருகிறார்கள்! குறிப்பாக,
*** “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் இது வரை கிட்டத் தட்ட 37 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளார் கள்!
*** முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் மக்களின் பல தரப்பட்ட கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, ” முதல்வரின் முகவரி” என்ற புதிய திட்டம் உருவாக்கப் பட்டு அதற்காக தனி அதிகாரி நியமிக்கப் பட்டு இருக்கிறார்!
இப்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள “இன்னுயிர் காப்போம் ” திட்டத்தின்படி,மக்களின் உயிர் காக்க இன்னும் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் செய்து அவர்கள் காப்பாற்றப் படுவார்கள்!
இப்படி, மக்கள் மீது உள்ள அக்கறையால், முதல்வர் ஸ்டாலின் சிந்தித்து உருவாக்கிய இந்தத் திட்டங்களை மக்கள் வரவேற்கிறார் கள்!
** இதே நேரத்தில், கடந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த முக்கியமான சில வாக்குறுதிகளை நம்பியே மக்கள் தி. மு. க. வுக்கு வாக்களித்தார் கள்!
அவை…..
** கடந்த ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த எடப்பாடி உள்ளிட்ட அ. தி. மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் போடுதல்…
** ஜெ. மரண மரணத்தை வெளிக் கொண்டு வந்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தல்…
இதில்…..முதலாவதாக,அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழலுக்கான ஆதாரங்கள் இருந்தும்
அவர்கள் மீதான நடவடிக்கைகள் வேகமாக நடக்கவில்லை என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது!
** அடுத்ததாக, தற்போது தமிழகத்தில் சிலர் அராஜகமாகப் பேசி வருவதை அரசு மென்மையாக அணுகுகிறது…..அவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்பதும் மக்கள் கருத்தாக உள்ளது!
** ஓவியர் இரா. பாரி,