சென்னை:
தடுப்பூசி போடாதவர்களே அதிக மரணம் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் ஆர்வமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 3 மாதங்களில் கொரோனாவில் உயிரிழந்த 2011பேரில் 1675 பேர் தடுப்பூசி போடாதவர்கள். காலதாமதப்படுத்தாமல் தடுப்பூசி போட சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Patrikai.com official YouTube Channel