சென்னை

ன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயங்க உள்ளன.

தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ததால் பல இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.  இந்த மழை நீர் ரயில் தண்டவாளங்களிலும் தேங்கியதால் நேற்று பல இடங்களில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது மழை நின்றுள்ளதால் நிவாரணப்பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.  மிகக் கனமழைக்கான ரெட் அலர்ட் திரும்பப் பெற பட்டுள்ளது.   ஆயினும் இன்று சென்னையில் மீண்டும் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் அடிப்படையில் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “தொடர் மழை காரணமாகச் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- வேளச்சேரி  மார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.” எனக் கூறப்பட்டுள்ளது.