சிலம்பட்டி

மிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு காவல்துறை ஆய்வாளரை ஒரு விரல் காட்டி எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர்  என்பது அனைவரும் அறிந்ததே.   அவர் பாஜக சார்பில் தேனியில் நடைபெறும் முல்லைப் பெரியாறு மீட்பு போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லும் வழியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.

இதையொட்டி காரை விட்டு இறங்கிய அண்ணாமலையை, உசிலம்பட்டி  காவல்துறை ஆய்வாளர் விஜயபாஸ்கர் முன் அனுமதி பெறவில்லை என அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. மீண்டும் காரில் ஏறிப் புறப்படத் தயாரான நிலையில், கட்சி நிர்வாகிகள் அவரை கண்டிப்பாகத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

இதனால் காரை விட்டு இறங்கிய அண்ணாமலை ஆய்வாளரைப் பார்த்து ஒரு விரல் காட்டி என் கட்சிக்காரரை மிரட்டாதீர்கள் என எச்சரித்து விட்டு தேவர் சிலைக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆக இருந்தும் காவல்துறை ஆய்வாளரை மிரட்டும் தொனியில் ஒருவிரல் காட்டி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.