சென்னை: 
சென்னையில் பெய்து வரும் கனமழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டும் வகையில் டிவிட்டரில் தாயுமானவர் ஸ்டாலின்- ஹாஷ்டேக் டிரண்டாகி வருகிறது.
சென்னையில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. விடிய விடிய மழை பெய்ததால் சென்னையின் பல சாலைகள் வெள்ளக் காடானது. குறிப்பாக பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர், ஆர்கேநகர் என பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், பெரம்பூர், பட்டாளம், பாடி மேம்பாலம், அயனாவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டார்.  இதனிடையே, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அதிகாரிகளுடன் இணைந்து உதவி மற்றும் நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும் என தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், கனமழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டும் வகையில் டிவிட்டரில் தாயுமானவர் ஸ்டாலின்- ஹாஷ்டேக் டிரண்டாகி வருகிறது.