மும்பை:
மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 17 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீயில் சிகிச்சை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel