காபூல்: ஆப்கானிஸ்தானில் அயல்நாட்டு பணம், கரன்சிகளை பயன்படுத்த தாலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வெளியேறத் தொடங்கியதும் தாலிபான்கள் ஆட்டம் அதிகரிக்கத் தொடடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த (2020)ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நாடு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றி நாடு  முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் .

இதைத்தொடா்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு உதவிகள் வழங்கி வந்த உலக நாடுகள், அதை நிறுத்தின. உலக வங்கியும் நாட்டில் திட்டங்களுக்கான நிதியை நிறுத்தியது. இதனால், ஆப்கனில்  கடுமை யான பொருளாதார மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் தாலிபான்களின் பல்வேறு மக்கள் விரோத உத்தரவுகள் அந்நாட்டு மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் உணவு பஞ்சம் தலைதூக்கி உள்ளது.

இந்த நிலையில், ஆப்கனில் வெளிநாட்டு கரன்சிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பரவலாக அமெரிக்க டாலர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது,  அமெரிக்கடாலர் உள்பட அனைத்து வெளிநாட்டு நாணயங்களின் பயன்பாடுகளுக்கும் தடை விதித்து தலிபான் அமைப்பு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் நாணயங்களின் மதிப்பையும், பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியாக, ஆப்கானி என்ற சொந்த நாட்டு நாணயங்களை மட்டுமே அனைத்து ஆப்கானியர்களும் தங்கள் ஒவ்வொரு வர்த்தகத்திலும் பயன்படுத்த வேண்டும்” என்றும்,  மேலும் வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் இந்த நடவடிக்கை, ஆப்கானிஸ்தால் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் என்றும், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.