மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மாநில துணைமுதல்வர் அஜித்பவாரின் ரூ.1000 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அடுத்தடுத்த நடவடிக்கைகளால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாதகாங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான அஜித்பவார் மீது கடந்த ஆட்சி காலத்திலேயே ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டது. அதுதொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தாலும், மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் சிவனோ அரசு, அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது.
இதையடுத்து, மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள்மீது புகார்கள் எழுப்பப்பட்டன. இதில், உள்துறை அமைச்சராக இருந்த தேஷ்முக் காவல்துறை அதிகாரிகளிடேமே ரூ100 கோடி மாமூல் கேட்ட விவகாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனதுபதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள், துணைமுதல்வர் மற்றும் நிதி அமைச்சரமான அஜித்பவாரின் ரூ.1000 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். ஏற்கனவே அக்டோபர் மாதம் அஜித் பவாருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அஜித்பவாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை உள்பட பல நிறுவனங்கள் பினாமி பெயரில் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் துணை முதல்வரான நிதி அமைச்சர் அஜித்பவாரின் ரூ1,000 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது.