சபரிமலை
இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைகளுக்காக நடை திறக்கப்படுகிறது.
கேரள அரசு கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதன்படி வரும் 16 ஆம் தேதி சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்குவதால் தினசரி 25000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது.
இதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஊசி போடாதோர் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா சோதனை நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று சித்திரை ஆட்ட திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை ஒரு நாள் பூஜை நடந்து இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட உள்ளது. இன்றைய பூஜைக்கு 15000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.