
சன் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் வி.ஜே.அக்ஷையா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” தொடக்கத்தில் எனக்கு சிறிது மூச்சுத் திணறல் இருந்தது. உடனடியாக மருத்துவ ஆலோசனையை எடுத்துக் கொண்டு என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.
நான் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், கொரோனா வைரஸ் என்னை இப்போது பாதித்திருக்கிறது. கொரோனா வைரஸ் முழுமையாக ஒழியவில்லை. எல்லா இடத்திலும் இருக்கிறது. வெளியில் செல்லும்போது கவனமாக இருங்கள். முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். நான் இப்போது நலமாக இருக்கிறேன். உங்களின் வேண்டுதல்களுடன் விரைவில் மீண்டு வருவேன்” எனக் கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/CVnMI7jvUKR/
Patrikai.com official YouTube Channel