டில்லி

டந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறித்து முன்னாள் தலைவர் கபில்தேவ் விமர்சித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளில் தொடர்ந்து படு தோல்வி அடைந்துள்ளது.   இதுவரை இந்திய  அணி இப்படி ஒரு தோல்வியைச் சந்தித்தது இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.    இந்த போட்டிகளில் அனைத்து வீரர்களும் ஒரு வித பதற்றத்துடன் விளையாடியதை அனைவரும் உணர முடிந்தது.

நேற்றைய போட்டி முடிந்த பிறகு இந்திய அணித்தலைவர் விராட் கோலி, “உண்மையில் நாங்கள் போதிய தைரியத்துடன் ஆடவில்லை.  எங்கள் அணி பேட்டிங், பவுலிங்க் ஆகிய எதிலும் சரியாக விளிஅயாடவில்லை.   அடித்து ஆட வேண்டிய நேரத்தில் நாங்கள் விக்கட்டை இழந்தோம்.   இனி பதற்றத்தை விட்டு ஆடுவோம்” எனக் கூறினார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் இது குறித்து, “தலைவராக உள்ள விராட் கோலி வெளிப்படையாக இவ்வாறு கூறியது அவருடைய பலவீனத்தை காட்டுகிறது..   அவருக்கு தன் அணியை அதிக ரன்களுடன் வெற்றி  பெறச்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் உள்ளது நமக்குத்  தெரியும்.   

அதே வேளையில் அணியின் வீரர்கள் சிந்தனை மற்றும் செயல் திறன் சரியாக இல்லாவிட்டால் அவர்கள் மனநிலையை மாற்றுவது கடினம்,  வீரர்கள் அணியின் மீதான விமர்சனம் நியாயமானதாக உள்ள போது சமாளிக்க வேண்டும்.  இதற்கு ரவி சாஸ்திரி மற்றும் தோனி ஆகியோர் தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி  ஊக்குவித்து இருக்க வேண்டும்” என விமர்சித்துள்ளார்.