புனே

ரும் 2024ஆம் வருடம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்..

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சி இணைந்து ஆட்சி செய்து வருகிறது.   இதற்கு முன்பு பல வருடங்கள் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த சிவசேனா கட்சி தற்போது பாஜகவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் புனேவில் நேற்று ஒரு நிகழ்வில் கலந்து கொண்டர்.  அப்போது அவர் செய்தியாளர்களிடம், ”இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் நாட்டில் ஆழமாக வேரூன்றிய கட்சியான காங்கிரஸ் இல்லாமல் எந்த ஒரு கட்சியும் அரசு அமைக்க முடியாது.  

இப்போது முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸும் மற்ற கட்சிகள் பிராந்திய கட்சிகளாகவும் உள்ளன.  வரும் 2024 ஆம் வருடம் பொதுத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கப்படும்.  தற்போதுள்ள ஒற்றைக் கட்சி ஆட்சிக்கு இந்த கூட்டணி முடிவு கட்டும்.

அரசியல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பல்லாண்டுகளுக்கு மேல் பாஜக ஆட்சியில் இருக்கும் எனக் கூறி உள்ளார்.  இந்திய அரசியலில் பாஜக நிச்சயம்  இருக்கும்.  ஆனால் அது ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும்.  

தன்னை உலகின் மிகப் பெரிய கட்சி என பாஜக கூறிக் கொள்கிறது. அக்கட்சி தோற்றால் உலகின் மிகப் பெரிய எதிர்க்கட்சி ஆக விளங்கும்,   தற்போது மகாராஷ்டிராவில் 105 உறுப்பினர்களுடன் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு  இன்னும் நேரம் உள்ளது.  நாங்கள் தற்போது தாத்ரா, நாகர் ஹவேலி, கோவா ஆகிய இடங்களில் கவனம் செலுத்தி வருகிறோம்.  உத்தரப் பிரதேசத்தில் நாங்கள் சிறிய வீரர்கள் தான்.  இருந்தாலும் அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.