சென்னை: நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1ம் வகுப்பு  முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி,

மாணவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு முதல் முறையாக பள்ளிக்கு வருவதால், கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட மன மகிழ்ச்சி செயல்பாடுகளை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

1 முதல் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு 15 நாட்கள் வரை மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வகுப்புகளை நடத்த வேண்டும்.

புத்தாக்க பயிற்சி, முதன்மை பாடத்திட்டம் ஆகியவற்றை சிறுது கால அவகாசத்திற்கு பிறகு பின்பற்றவேண்டும்.

2 முதல் 5ம் வகுப்பு வரை 50 நாட்களுக்கு புத்தாக்க பாடத்திட்டத்தை நடத்த வேண்டும்.

பள்ளிகளை திறந்தவுடன் 1 முதல் 8ம் வகுப்பு வரை முதல் நாளே பாடத்திட்டங்களை தொடங்க வேண்டாம்/

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.