சென்னை
மதுரை நகரில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தின் மாதிரிப்படம் வெளியாகி உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதியின் நினைவையொட்டி மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி சென்னை கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தது தெரிந்ததே.
மதுரையில் அமைய உள்ள நூலகமும் அதைப் போலவே பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகம் 24 பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளது.
தற்போது தமிழக அரசு மதுரை நகரில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தின் மாதிரிப்படத்தை வெளியிட்டுள்ளது. இணையத்தில் இந்த படம் பலராலும் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த நூலகத்தின் அமைப்பைப் பலரும் பாராட்டி பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.
[youtube-feed feed=1]