டெல்லி: இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்று பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்ந்து, சென்னையில் லிட்டர் பெட்ரோல் விலை 105,15 ஆகவும், மும்பையில் லிட்டர் பெட்ரோல் விலை 114,14 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் எரிபொருட்களான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாமல் இருந்தது. ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்த மாதம் (அக்டோபரில்) பெட்ரோல் டீசல் விலை உயர்வு வரலாறு காணாத அளவில் லிட்டர் ரூ.100 ஐ தாண்டி விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் இன்று லிட்டருக்கு 33-35 பைசா அளவிலும் டீசல் விலை லிட்டருக்கு 35 – 37 பைசா அளவில் எண்ணை நிறுவனங்கள் விலையை உயர்த்தி உள்ளன.
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும், உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 0.30 காசுகள் அதிகரித்து ரூ. 105.13-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 0.34 காசுகள் அதிகரித்து ரூ. 101.59-க்கும் விற்பனை ஆகி வருகிறது.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.108.64 ஆகவும், டீசல் ரூ. 97.37 ஆகவும்,
மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.114.47 ஆகவும், டீசல் ரூ. 105.49 ஆகவும்இ
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.108.29 ஆகவும், டீசல் ரூ. 109.49 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.