சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் ஆர்எஸ்எஸ்-ன் திட்டம் என்றும்,ஷாகாக்கள் நடத்தும் சங்பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சுமனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார். திமுக கூட்டணி கட்சியான திராவிடர் கழகம் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்து விரிவான விளக்கம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் நேற்று மரக்காணத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமானமு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இதை ஒரு எச்சரிக்கையாக மட்டுமே பார்க்கிறோம். இந்த திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தலைவர்களின் கருத்துக்களை கவனத்துடன் பரிசீலிப்போம். சித்தாந்த ரீதியாக கொள்கை கொண்ட தன்னார்வலர்களை இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அனுமதிக்கமாட்டோம் என்றும், அதனையும் மீறி யாரேனும் பதிவு செய்தால் அவர்கள் திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவாதர்கள் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்துள்ள தலைவர்களுக்கு இத்திட்டம் குறித்து முழுமையாக இன்று மாலைக்குள் விளக்கம் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.