க்னோ

கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.  கடந்த 24 ஆம் தேதி இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன போட்டி நடந்தது.  இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.  இந்த அணியின் வெற்றியை இந்திய அணித் தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் பாராட்டி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார்ப் பள்ளியில் பணி புரிந்து வந்த ஆசிரியையான நஃபீசா அட்டாரி என்பவர் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடி சமூக வலைத் தளத்தில் பதிவிட்டதால் அவரை பள்ளி நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது.  பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதையொட்டி உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என் எச்சரிக்கை விடுத்துள்ளார்.