திருவண்ணாமலை

புகழ் பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்குத் தமிழக அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலையில் கோவில் வளர்ச்சி பணிகள், கோவில் கிரிவலப்பாதை தீபத் திருவிழா குறித்து நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ரூ.55.45 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் எ வ வேலு ஆகியோரால் வழங்கப்பட்டது.

அப்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதி உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினர்.  அமைச்சர் சேகர்பாபு தனது பதிலில், ”அரசு சார்பில் அண்ணாமலையார் கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற கோயில்களில் ரூ.84 கோடியில்  பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலையில் தினசரி 25 பேராவது கரோனா தொற்றுக்கு ஆளாவதாகக் கூறப்பட்டுள்ளத.   இனி வரும் நாட்களில் கரோனா தொற்றின் வேகம் கணக்கிட்டு முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதுடன் தொற்று ஏற்படாது என்று தெரிந்தால் அது குறித்து ஆய்வு செய்து தீபத்திருவிழாவில் பக்தர் களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.