சென்னை: கருவூல கணக்குத்துறை சார்பில் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள  7 கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில்  கருவூல கணக்குத்துறை சார்பில் திருநெல்வேலி, காஞ்சிபுரம், திண்டுக்கல், மணச்சநல்லூர், பூவிருந்தவல்லி, மயிலாடுதுறை, திண்டிவனத்தில் கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த கட்டிட பணிகள் முடிவடைந்த நிலையில், கருவூல கணக்குத்துறைக்குசொந்த  அந்த  7 கட்டடங்களை  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக திருநெல்வேலி, காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள 3 மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடங்களையும்  மணச்சநல்லூர், பூவிருந்தவல்லி, மயிலாடுதுறை, திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள 4 சார் கருவூல அலுவலகக் கட்டடங்களையும்  கட்டங்களை திறந்து வைத்தார்.

மேலும்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ரூ. 11,36,20,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, 5 ஒருங்கிணைந்த சேவை மையங்கள், தஞ்சையில் அரசு பணிபுரியும் மகளிர் விடுதி உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.