புதுடெல்லி:
பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி வரும் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அக்டோபர் 31 ஆம் தேதி கிளாஸ்கோவிற்கு ரோமிலிருந்து புறப்பட்டு நவம்பர் 1 ஆம் தேதி ஜி-20 உச்சி மாநாட்டில் உரையாற்றுகிறார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் அவர் நேரில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.