நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
சிமெண்ட்டும் சினிமாவும் சேதாரம் பண்ணுது..
சன் பிக்சர்ஸ் தயாரித்த அண்ணாத்த.. வசூலை அள்ளி தரப்போறாரோ இல்லையோ, திமுக கவர்மெண்ட் அராஜகம் கொடி கட்டி பறக்க ஆரம்பிச்சிடுச்சுன்னு சேத்தை வாரி அடிக்கப்போறார்..
தியேட்டர்கள் கிடைக்காததால் சின்ன தயாரிப்பாளர்கள் அழுகையால் சினிமா இண்டஸ்ட்ரி கொதிச்சு போய் கெடக்குது..
அன்று மட்டுமல்ல எக்ஸ்ட்ரா லக்கேஜ்ஜால திமுகவுக்கு என்றைக்குமே தொல்லை..
இன்னொரு பக்கம் சிமெண்ட் விலை..
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் சிமெண்ட் விலை தாறுமாறாக ஏறி கிட்டிருக்குன்னு யாருக்குமே புரியலை..
சில மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் உற்பத்தியாளர்களைலந்து பேசியதன் விளைவாக சிமெண்ட் விலை குறைக்கப்பட்டது என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னார்..
ஆனால் கடந்த சில வாரங்களாக விலையேற்ற குரங்கு மறுபடியும் தாவித்தாவி விளையாட ஆரம்பித்துள்ளது. மூட்டைக்கு 100 ரூபாய் உயர்ந்துள்ளது. ஏன் ஏறியது? எதற்காக ஏறியது? எவரிடமும் பதில் இல்லை.
கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்து தொழில் செய்யலாமா அல்லது தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போய்விடலாமா என்று புலம்புகிறார்கள்.
குருவிக்கூடு மாதிரி சின்னதாக வீடு கட்டும் ஏழை நடுத்தர மக்கள் என்ன எழவுடா இது என்று சிமெண்ட் விலையை பார்த்து காறித் துப்புகிறார்கள்..
இந்த லட்சணத்தில் சிஎஸ்கே. என்ற ஒரு தனியார் கிரிக்கெட் டீம் விளையாடி வெற்றி பெற்றதை பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த காலத்தில் சொல்லுவார்கள் பிச்சைக்காரன் பாத்திரத்தில் 4 வீட்டு சோறு என்று. அதேபோலத்தான் இந்த ஐபிஎல் டீம்கள் என்பது.
பச்சையாக சொன்னால், எந்த தேதியில் யார் யாரிடையே மேட்ச்? யார் வெற்றி பெறுவார்கள்? யார் பைனலுக்கு போவார்கள்? என ஐபிஎல் டீடைல்ஸ்சை தினசரி காலண்டரில் முன்கூட்டி அச்சடித்துக் கொடுத்து விடலாம்..