சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாஸ்டல்’. இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார்.
இதில் நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘அடி கப்பியரே கூட்டமணி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதற்கு ஒளிப்பதிவாளராக பிரவீன், இசையமைப்பாளராக போபோ சசி, எடிட்டராக ராகு, கலை இயக்குநராக துரைராஜ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து யூ/ஏ சான்றிதழ் கிடைத்துளளது என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் லிரிக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.