மும்பை: போதை பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான மகன் ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து அவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக போதை தடுப்பு பிரிவு போலீசார் தகவல் கிடைக்க அங்கு விரைந்து சென்ற போதை தடுப்பு பிரிவு போலீசார் கப்பலில் தீவிர சோதனை நடத்தினார்கள். இந்த சம்பவம் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடந்ததாகவும், அந்த பார்ட்டியில் நடிகர் ஷாருக்கானின் மகன் அர்யன் கானும் பங்கேற்றிருந்தார். அவரும் போதை மருந்து உட்கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான், உள்பட 10 பேரை போலீசார் கைது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில், ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோர் தரப்பில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவர்களை ஜாமீன் மனுக்களை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கானின் மேற்கு பாந்த்ரா வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரெய்டு! பாலிவுட்டில் பரபரப்பு!