போபால்: மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி காயத்துடன் உயிர் தப்பினார்.
மத்திய பிரதேசத்தில் விமானப்படை பயிற்சித்தளம், பிந்த் பகுதியில் உள்ள மலைப்பிரதேசத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை விமானப்படையின் பயிற்சி விமானத்தை விமான ஒருவர் பயிற்சிக்காக எடுத்துச் சென்றார். விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானி பாராசூட் மூலம் தப்பினார். அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிந்த் விமானப்படைத்தளம் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் கூறும்போது, இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 என்ற விமானம் இன்று காலை பயிற்சியின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், அப்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.