சென்னை: பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் இதுபோன்ற சோதனைகள் வழக்கமானதுதான், அதற்காக நாங்கள் மனம் கலங்க மாட்டோம் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூலாக தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் என 43 இடங்களில் சோதனை நடைத்தப்பட்டது. இதில் 4.87 கிலோ நகைகள், 24 லட்சம் ரூபாய் மற்றும் ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தாலும் அதிமுகவினராகிய நாங்கள் அதற்கு பயன்படுவது இல்லை; பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வழக்கமானவைதான் என தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நான் குடும்பத்துடன் வசித்துவரும் வீட்டிலும் சோதனையை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் நடத்தினர்கள். இந்தச் சோதனையில் எனது வீட்டில் இருந்து எந்தவிதமான பணம், நகை உள்ளிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. எனது எல்லா சொத்துகளுக் கும் முறையான ஆவணங்கள் உள்ளன. அதைத் தேவைப்படும்போது காண்பிக்கத் தயாராக உள்ளேன் என்றவர், இந்த குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாகச் சந்திப்பேன் என்றார்.
தற்போது, அதிமுகவினுடைய சோதனைக்காலம் என்பதால் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்டுவருகிறோம். இந்தச் சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தாலும் அதிமுகவினராகிய நாங்கள் மனம் கலங்கமாட்டோம்; பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் சோதனைகள் வழக்கமானவை.சட்டத்தின்படி நடப்பவன் என்பதால், சோதனையின்போது முழு ஒத்துழைப்பு வழங்கினேன். அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவிப்பு! விஜயபாஸ்கர்மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு…