தூத்துக்குடி: பிரபல ரவுடி தூத்துக்குடி துரைமுருகன் இன்று காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிia சுற்றிவளைத்த காவல்துறையினர், அவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

ரவுடி துரைமுருகன் 19 வழக்குகளில் தொடர்புடைய தொடர் குற்றவாளி என கூறப்படுகிறது. மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் துரைமுருகன் மீது வழக்குகள் உள்ளன. இவரை பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டு வந்த நிலையில், அவர் தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர், அவர் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதையறிந்த ரவுடி துரைமுருகன் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றபோது தடுத்த காவல்துறையினரை தாக்கிவிட்டு செல்ல முயன்றபோது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார்.
ரவுடி கொல்லப்பட்ட இடத்துக்கு நேரில் வருகை தந்த தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் அங்கு ஆய்வு செய்தார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
[youtube-feed feed=1]