சென்னை: தமிழகஅரசு கோவில்கள் திறப்பு உள்பட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால்,  பண்டிகையின்போது, மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால்,  அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும்  ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படவும், மழலையர், நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்றும்,  திருவிழாக்கள், அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  சென்னையில் பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும.

வணிக வளாகங்களில், வணிக நிறுவனங்கள் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை குறைந்த எண்ணிக்கை நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணிபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்,

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள  வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.