டில்லி
இந்தியாவில் நேற்று 16,998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,36,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,988 அதிகரித்து மொத்தம் 3,40,36,684 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 378 அதிகரித்து மொத்தம் 4,51,469 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 19,370 பேர் குணமாகி இதுவரை 3,33,74,485 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,97,239 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 2,384 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,86,280 ஆகி உள்ளது நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,705 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,343 பேர் குணமடைந்து மொத்தம் 64,13,418 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 29,560 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 9,246 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 48,29,944 ஆகி உள்ளது. இதில் நேற்று 963 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,667 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,952 பேர் குணமடைந்து மொத்தம் 47,06,856 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 95,892 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 310 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,82,399 ஆகி உள்ளது இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,922 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 347 பேர் குணமடைந்து மொத்தம் 29,34,870 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,578 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,259 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,83,396 ஆகி உள்ளது இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,853 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,438 பேர் குணமடைந்து மொத்தம் 26,32,092 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,451 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,59,122 ஆகி உள்ளது. நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,286 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 557 பேர் குணமடைந்து மொத்தம் 20,38,248 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.