சென்னை
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பது உள்ளிட்ட பல தளர்வுகளை அரசு அறிவித்த்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக இருந்ததால் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் படிப்படியாக கொரோனா பாதிப்பு பெறுமளவில் குறைந்துள்ளது. இதனால் அரசு சில தளர்வுகள் அறிவித்திருந்தது. ஆனால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தின்ங்களில் வழிபாட்டு தலங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கவில்லை.
இதையொட்டி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க கோரிக்கை விடப்பட்டது. இதைப் பற்றியும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பதை பற்றியும் தமிழக முதல்வர் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அவை பின் வருமாறு :
- வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி
- ஞாயிறு அன்று கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதி
- தனியார் நிறுவனங்கள் நடத்து பொருட்காட்சிகளுக்கு அனுமதி
- மழலையர் மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் செயல்பட அனுமதி
- திருமண விழாக்களில் 100 பேர் பங்கேற்க அனுமதி
- அனைத்த்ய் கடைகள் மற்றும் உணவு விடுதிகளும் இரவு 11 மணி வரை திறந்திருக்க அனுமதி
- ஆயினும் அரசியல், சமுதாய மற்றும் திருவிழாக்கள் நடத்தத் தடை தொடர்கிறது.