நாளை சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்
சரஸ்வதி பூஜை என்பது கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளைப் பிரார்த்திக்கும் திருநாள் ஆகும் நமக்குக் கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாகக் கருதி வழிபடுவதே ஆயுதபூஜையின் ஐதீகம்.
ஒவ்வொரு வருடமும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் முக்கியமானது. அவை துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை நாட்கள் ஆகும். கல்வி, தொழில் சிறக்கவும், தொழில் வெற்றிக்காகவும் அன்னையை வழிபடுகிறோம்.
நாளைய தினம் அதாவது புதன்கிழமை இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 28ஆம் தேதி அக்டோபர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணிவரை பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை மாலை 04.30 மணிவரை 6.50 மணிவரை ஆகும்.