சென்னை

மிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்  வழங்குவது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தற்போது வெகுவாக குறைந்துள்ளது  தமிழகத்தில் நேற்று 1,289 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,80,857 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,814 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,421 பேர் குணமடைந்து மொத்தம் 26,29,201 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 15,842 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் தற்போது பெரும்பாலானோருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.   இருப்பினும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து வருகிறது.   இதில் ஒன்றாக வெள்ளி,, சனி , மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு த் தலங்கள் மூடப்பட்டுள்ளன.   இவற்றை திறக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்த முடிவைத் தமிழக அரசு தான் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர், மருத்துவச் செயலர் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.  பாஜக சார்பில் வார இறுதியில் கோவில்கள் திறக்க கோரிக்கை வைத்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடப்பது குறிப்பிடத்தக்கதாகும்.