லாஸ் ஏஞ்சல்ஸ்

நேற்று தெற்கு கலிஃபோர்னியாவில் நடந்த விமான விபத்தில் வீடுகள் தீப்பிடித்து இருவர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று தெற்கு கலிஃபோர்னியாவில் ஒரு சிறிய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது.   சான் டியாகோ நகரில் வடகிழக்கில் சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள புறநகர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.  இந்த விபத்தில் இரண்டு வீடுகள், ஒரு லாரி உள்ளிட்டவை தீப்பிடித்துள்ளன.

இது இரட்டை எஞ்சின் கொண்ட சி 340 ரக விமானம் ஆகும்.  இந்த விமான விபத்து குறித்த விவரமான தகவல்கள் வெளியாகவில்லை.   இந்த விபத்து நடந்த பகுதிக்கு மிக அருகே ஒரு பள்ளிக்கூடம் இருந்துள்ளது.  இந்த பள்ளியில் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகப் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

விமானம் விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.  இருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   பல இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமடைந்ததாக கூறப்படுகிறது.  அந்த பகுதி முழுவதுமே கரும் புகை மண்டலமாகக் காட்சி அளித்துள்ளது.

 

[youtube-feed feed=1]