கோவை: தவறான மின் கணக்கீட்டால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் தவறான மின் கணக்கீடு செய்த கணக்கீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிர்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த 3 ஆண்டுகளாக தவறான மின் கணக்கீடு செய்த கணக்கீட்டாளரின் நடவடிக்கையால், நுகர்வோர் பாதிக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு மின்வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து நுகர்வோர் பாதிக்கப்படக் காரணமான கணக்கீட்டாளர் மீது மின்வாரியம் துறைரீதியான நடவடிக்கை எடுத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டில், மின் கணக்கீடு செய்யும் நபர் கடந்த 3 ஆண்டுகளாக மின் கணக்கீடு செய்யப்படவில்லை என்ற கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் மின்வாரிய அலுவலகத்துக்தில் சென்று விசாரித்தபோது, உங்களுக்கு மின் கட்டணம் இல்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது புதிதாக வந்த மின் கணக்கீட்டாளர், அந்த வீட்டின் உரிமையாளர், ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது வீட்டின் உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தான் இதுகுறித்து மின் வாரியத்திடம் பலமுறை முறையிட்டதாகவும், அவர்கள் எனக்கு மின் கட்டணம் வரவில்லை, மின் உபயோகம் இல்லை என்று கூறினார்களே என்று தெரிவித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த மின் கணக்கீட்டாளார், மின் கட்டணத்தை செலுத்தவில்லையெனில் மின் இணைப்பைத் துண்டித்துவிடுவோம் எனஎச்சரித்தார்.
இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு மூலம், கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளருக் குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து விவகாரம் சூடுபிடித்தது. இதுகுறித்து, வீட்டு உரிமையாளர் ராமசாமியின் வீட்டு மின் அளவு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் மின்கணக்கீடு செய்யாப்படாதது தெரிய வந்தது.
இதையடுத்து, வீட்டின் உரிமையாளருக்கு சோமனூர் மின்வாரியச் செயற்பொறியாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், மின்வாரிய கணக்கீடு அளவானது தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் 2021 ஆகஸ்ட் மாதம் வரை கணக்கீட்டாளரால் தவறாகக் கணக்கிடப்பட்ட காரணத்தால், அதன்பிறகு பெறப்பட்ட மின் அளவி ஆய்வக அறிக்கையின்படி, ரூ.6,918-ஐ மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும், கடந்த செப்டம்பர் மாதக் கணக்கீட்டின்படி ரூ.581 மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட கணக்கீட்டாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.