டெல்லி: 2030 ஆண்டுக்குள் நாடு முழுவதும் 100 சதவிகித மின்சார வாகனம் என்ற இலக்கில், முதல்கட்டகமா 30 சதவிகிதம் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டை கொண்டுவர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பிக்கி(FICCI) அமைப்பு சார்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்களில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி உரையாற்றி னார். அப்போது, இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி குறித்து பேசியதாவது,
நாட்டின் வாகனத்துறையால் கார்பன் வாயு வெளியேறும் அளவை குறைக்க வேண்டிய முக்கியத் தேவை எழுந்துள்ளது. பொருளாதாரம், சூழலியல் என்ற பார்வையில் இந்நடவடிக்கை அவசியம் ஆகும். காற்று, புகை மாறுக்களை தடுக்க மின்சார வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
“நாட்டின் 40 விழுக்காடு இருசக்கர வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறும் பட்சத்தில், இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு 15 கோடி டன் குறையும். இதன் மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடி. , அரசு வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காடு கார்களையும், 40 விழுக்காடு பேருந்துகளையும், 80 விழுக்காடு இரண்டு, மூன்று சக்கர வாகனங்களையும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
இதற்காக பல்வேறு அறிவிப்புகளை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு நாட்டின் 25 மாநிலங்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதில் 15 மாநிலங்கள் கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன என்று கூறினார்