நாட்டின் 89வது விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 1360 தீ்க்குச்சிகளைக் கொண்டு விமானத்தின் மாதிரியை செய்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

1920களில் பிரிட்டிஷ் விமானப்படையில் இடம்பிடத்த இருவர் அமர்ந்து செல்லக்கூடிய வெஸ்ட்லேன்ட் வாபிதி ரக போர் விமானத்தை போன்று இதனை வடிவமைத்துள்ளார்.

33 அங்குல நீளமும் 40 அங்குல அகலமும் கொண்ட இந்த விமானத்தை வடிவமைக்க 5 நாட்கள் ஆனதாக சஷ்வத் ரஞ்சன் சாகு என்ற அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு 3600 குச்சிகளைக் கொண்டு சைக்கிள் ஒன்றை வடிவமைத்த சஷ்வத் ரஞ்சன், உலக ரேடியோ தினத்தின் போது 1980களின் ரேடியோவை வடிவமைத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.