சென்னை

மிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 1 ஆம் வகுப்பு குழந்தைகளுடன் பெற்றோர்கள் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் சென்ற ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.   இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றனர்.   தற்போது கொரோனா  பாதிப்பு குறைந்து வருகிறது.  எனவே சென்ற மாதத்தில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கு வருகின்றன.

இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் 1 முதல் 9 வகுப்புக்கள்  வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் வரும் நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு  முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் முதல்-முறையாகப் பள்ளிக்கு வருகை தருகிறார்கள். ஆகவே அவர்கள் எவ்வாறு முககவசம் அணிவது, எவ்வளவு நேரம் அணிய வேண்டும் என்று தெரியாமல் இருப்பார்கள்.

எனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி முடியும் வரை அவர்களுடன் உடன் இருக்கலாம். அந்த குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு முககசவம் அணிய முடியாத நிலை ஏற்படும் போது எப்போது வீட்டுக்குச் செல்ல நினைக்கிறார்களோ அப்போது செல்லலாம்” எனக் கூறி உள்ளார்.