டெல்லி: லக்கிம்பூர் கேரி சம்பவம் வெட்கக்கேடானது, திட்டமிடப்பட்ட தாக்குதல் என பாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பீரேந்தர் சிங் கடுமையாக சாடிய நிலையில், மத்திய அரசு, விவசாயிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான நேரம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் கடந்த ஞாயிறன்று விவசாயிகள் போராட்டத்தின் போது, மத்திய அமைச்சரின் மகன் சென்ற சார், விவசாயிகள் மீது மோதிவிட்டு சென்றது. இதையடுத்து வன்முறை தலைவிரித்தாடியது. இதில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தசம்பவம் தொடர்பாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய விவசாயத் தலைவர்கள் உத்தரப் பிரதேச அரசுக்கு ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சவுத்ரி பீரேந்தர் சிங், லக்கிம்பூர் கேரி சம்பவத்தை “வெட்கக்கேடானது” . “இது சாதாரணமானதல்ல, இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்பதை சுட்டிக்காட்டும் உண்மைகள் உள்ளன” என்று கூறி உள்ளார்.
மேலும், “விவசாயிகள் போராட்டம் குறித்து நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன், நீண்டகாலமாக ஏதேனும் போராட்டம் தொடர்ந்தால் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கலாம். அதுபோலவே நான் லக்கிம்பூர் சம்பவத்தை இரண்டு வழிகளில் பார்க்கிறேன்.
ஒன்று அரசியல்வாதிகள் அங்கு தேர்தல் முறையில் (உத்தரபிரதேசத்தில்) உள்ளதால், அங்கு போட்டி ஏற்பட்டுள்ளது
இரண்டாவதாக, அதன் பலனைப் பெற ஒருவருக்கொருவர் போட்டி உள்ளது.
இந்த நிகழ்வு தன்னிச்சையாக இல்லாததால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதில் உண்மைகள் உள்ளன. அதை அந்த வீடியோ சுட்டிக்காட்டுகிறது. இந்த செயல் திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டுள்ளது.
இந்த “சம்பவம்” ஒரு வினையூக்கியாக செயல்படலாம் மற்றும் “அதிக பிரச்சனைகளை உருவாக்கும் அளவுக்கு கிளர்ச்சியை தூண்டிவிடலாம்” என்று கூறியதுடன், “அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் நிர்வாகம் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான பீரேந்தர் சிங் பெரிய விவசாயத் தலைவர் சர் சோட்டு ராமின் பேரன். பாஜக தலைவரான இவர் 2014 முதல் 2016 வரை ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், சுகாதாரம் மற்றும் குடிநீர் அமைச்சராகவும், பின்னர் 2016 முதல் 2019 வரை மத்திய அரசின் எஃகு அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களிடம் இருந்து பலனை பெற அரசியல்வாதிகள் எந்த கட்டத்துக்கும் செல்வார்கள் என்பதற்கு இதுஒரு சான்று.