ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.65 கோடியையும் உயிரிழப்பு 48லட்சத்தை தாண்டியது.

இறுதியில் சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில்  பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் வீரியம் குறையாமல் பரவி வருகிறது. சமீப காலமாக  உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கி வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.  இந்த பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தற்போதைய நிலையில் பாதுகாப்பாக உள்ளது. இதனால் மக்களுக்கு  தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை  236,568,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,830,622 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 213,687,375 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18,050,462 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 17,965,118 (99.5%) பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 85,344 (0.5%)  பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன