டில்லி
இந்தியாவில் நேற்று 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,38,51,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,752 அதிகரித்து மொத்தம் 3,38,51,005 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 254 அதிகரித்து மொத்தம் 4,49,283 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 29,300 பேர் குணமாகி இதுவரை 3,31,13,644 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,45,689 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,165 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,62,514 ஆகி உள்ளது நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,233 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,389 பேர் குணமடைந்து மொத்தம் 63,86,059 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,637 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 8,850 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,28,056 ஆகி உள்ளது. இதில் நேற்று 149 பேர் உயிர் இழந்து மொத்தம் 25,377 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 17,007 பேர் குணமடைந்து மொத்தம் 45,74,206 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,28,795 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 397 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,78,286 ஆகி உள்ளது இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,832 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 693 பேர் குணமடைந்து மொத்தம் 29,28,433 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,467 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,69,962 ஆகி உள்ளது இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,666 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,559 பேர் குணமடைந்து மொத்தம் 26,17,432 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 429 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,53,192 ஆகி உள்ளது. நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,208 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,029 பேர் குணமடைந்து மொத்தம் 20,29,231 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,753 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி லட்சத்தீவுகளில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.