ஷார்ஜா:
மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடடல்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
130 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் டெல்லி அணி வீரர் அக்ஸர் பட்டேல்.
இந்த வெற்றி மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2 இடத்தில் உள்ளது.
Patrikai.com official YouTube Channel