சென்னை: பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு 2021-2022 ஆண்டிற்க்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்விற்கான ஆணை வழங்குதல் மற்றும் 2021-2022ஆம் ஆண்டிற்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மா. சுப்பிரமணியன் ஊதிய உயர்வு அரசாணையைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கான (MDS) தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு 2021-2022 ஆண்டிற்க்கான தரவரிசைப்பட்டியல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று (02.10.2021) சென்னையில் வெளியிடப்பட்டது. பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான மொத்த இடங்கள் 358, அரசு கல்லூரிகளுக்கான இடங்கள் 62, கயநிதி கல்லூரிகளுக்கான இடங்கள் 296 ஆகும். நடப்பு சுல்வி ஆண்டில் (2021-2022) பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 1018, இதில் தரவரிசைக்கு தகுதியான விண்ணப்பங்கள் 964.
இப்பட்டியல் அடிப்படையில் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான கலந்தாய்வு 03.10.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.