பெங்களூரு:
பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளான பிரசன்னகுமார் பிஎம்டிசி ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், யஷ்வந்த் என்ற மகனும், நிஷ்விகா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், பிரசன்னகுமார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதையடுத்து, துக்கம் தாளாமல் இருந்த அவரது மனைவி வசந்தா, தனது மகன் மற்றும் மகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று மாலை வசந்தாவின் சகோதரர் வீட்டுக்கு வந்தபோது, கதவை தட்டியும் திறக்காததால், இந்த சம்பவம் தெரிய வந்தது.
கொரோனா காரணமாக அவரது கணவர் பிரசன்ன குமார் இறந்த பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்று வசந்தா எழுதிய நீண்ட தற்கொலைக் குறிப்பை கவால் துறையினர் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.