மதுரை: காந்தி பிறந்தநாளையொட்டி மதுரை அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசி வருகிறார். முன்னதாக, அங்கு போகும் வழியில், வயக்காட்டில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களை சந்தித்து பேசினார்.

காந்தி பிறந்தநாளையொட்டி மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மதுரை சென்றார். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் வயலில் இறங்கி, முதல்வர் குறைகளை கேட்டார்.
Patrikai.com official YouTube Channel