ஜெ.ஆர்.டி. டாடா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை 67 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரத்தன் டாடா தலைமையிலான டாடா நிறுவனம் கைப்பற்றியதாக செய்தி வெளியான நிலையில், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் அதன் 70 சதவீத பங்குகளை விற்கப்போவதாக மோடி தலைமையிலான அரசு 2016 ம் ஆண்டு முதல் கூறிவருகிறது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் மற்றும் டாடா நிறுவனம் இடையே போட்டி நிலவுவதாகவும், இதில் டாடா நிறுவனத்திற்கு சாதகமாக மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகவும் செய்தி வெளியானது.

இந்த செய்தியை மறுத்துள்ள மத்திய முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமித் ஷா தலைமையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் அடங்கிய அமைச்சரவைக் குழு விரைவில் முடிவெடுக்கும் என்றும் ஏர் இந்தியா விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்கள் தான் வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.